அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’.. டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு !

by Lifestyle Editor

காதல் மழையில் நனைய வைக்கும் அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின்குமார் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் புகழ் நடித்துள்ளார். அதோடு இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக அவந்திகா மற்றும் தேஜு அஸ்வினி என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். விவேக் மேர்வின் கூட்டணி இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. காதல் மழை சொட்ட சொட்ட இருக்கும் இந்த டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment