தல மகளுடன் விளையாடும் தளபதி

by Column Editor

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை சம அளவில் வைத்திருக்கும் இரு முன்னணி நடிகர்கள் தான் தல அஜித் & தளபதி விஜய்.

தமிழ் திரையுலகை கடந்து இந்திய அளவில் அறியப்படும் இவர்கள் இருவரும் திரையில் போட்டிபோட்டு நடித்தாலும் நிஜ வாழ்வில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

தல அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அனௌஷ்கா என்ற 13 வயது மகளும் ஆத்விக் என்ற 6 வயது மகனும் இருக்கின்றனர்.

இவர்களுக்கும் ரசிகர்கள் இப்போழுதே இருக்கும் நிலையில் தளபதி விஜய் நடிகர் அஜித்தின் மகள் அனௌஷ்காவோடு சிறுவயதில் விளையாடும் அழகிய வீடியோ ஒன்று தல தளபதி ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment