நான் திருமணம் செய்யாமல் போனதுக்கு இவர் தான் காரணம்பல ஆண்டுக்கு பின் உண்மையை உடைத்த நடிகை;

by Column Editor

நடிகை தபு தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து வந்த இவருக்கு தற்போது 51 வயதாகிறது. படங்களில் குணச்சித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தபு தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்த போது நடிகர் நாகார்ஜூனாவும் தபுவும் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால், அந்த காதல் முறிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 51 வயதாகியும் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து நடிகை தபு மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என்று கூறியுள்ளார்.

மேலும், அவரை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே நன்றாக தெரியும். என்னுடைய அண்ணனுக்கு நெருங்கிய நண்பர். எப்போதும் என்னை பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்.

நான் எங்கு சென்றாலும் அங்கே வருவார். நான் எந்த ஒரு ஆணிடமும் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அந்த ஆணிடம் அவர் சண்டை போட்டு விடுவார். அவரால் தான் நான் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என நீண்ட ஆண்டுக்கு பின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Comment