காதலர் தின ஸ்பெஷலாக தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸாகும் ஹிட் காதல் படங்கள்..

by Lifestyle Editor

பிப்ரவரி என்றாலே காதலை கொண்டாடும் மாதம் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி கிளாசிக் ஹிட் காதல் படங்களை ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு காதலர் தினத்தன்று எந்தெந்த படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 96 படமும் ஒன்று. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் ஜோடியாக நடித்திருந்த இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்தது. பள்ளிப்பருவ காதலை கண்முன் கொண்டுவந்த படமாக இது இருந்தது. தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான இந்த 96 வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

பான் இந்தியா அளவில் ஹிட்டான காதல் படம் தான் சீதா ராமம். துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். கடிதம் மூலம் தொடங்கும் காதல் எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்படம் கண்கலங்க வைக்கும் கிளைமாக்ஸ் உடன் சொல்லி இருந்தது. இந்தப் படமும் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் அதிரிபுதிரி ஹிட் அடித்த மலையாள படங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பிரேமம் தான். இப்படத்தை கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வேறலெவலில் கொண்டாடினர். அதற்கு காரணம் அதில் தமிழ்நாட்டு கனெக்‌ஷன் அதிகளவில் இருந்தது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான பிரேமம் ஏற்கனவே திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காதல் படங்கள் என்றாலே கவுதம் மேனன் தான் சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்திருந்த இப்படம் கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு இப்படம் தவறாமல் ரீ-ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் சில திரையரங்குகள் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளன.

Related Posts

Leave a Comment