“படத்துல நிச்சயம் இது இருக்கு” – பீஸ்ட் படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த முக்கிய நடிகர்

by Column Editor
0 comment

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் பீஸ்ட். படத்தில் நடிகர் விஜய்யிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் படத்தை குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்திருக்கிறார்.

“பீஸ்ட் படத்தில் இயக்குனரின் தனித்துவமான நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். நகைச்சுவையான சீன்களை அருமையாக சின்க்ரோனைஸ் செய்வதில் நெல்சன் திறமை வாய்ந்தவர்” என்று கூறியிருக்கிறார் ஷைன் டாம்.மேலும் என்னுடைய கதாபாத்திரம் நகைச்சுவையான ஒன்றாக இருக்காது ஆனால் படத்தில் காமெடி நிச்சயம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment