தளபதினா சும்மாவா? டாப் 10ல் இடம் பிடித்த விஜய்

by Lifestyle Editor

ஆண்டு தோறும், ஈஸ்டர்ன் ஐ என்ற லண்டன் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஆசிய கண்டத்தில் உள்ள பிரபலமான செலிபிரிட்டிகளை வரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இவ்வாண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆசிய கண்டத்தில் உள்ள பிரபலமான நடிகர் நடிகைகளை உலக அளவில் எடுக்கப்படும் சர்வே மூலம் வரிசைப்படுத்தி “டாப் 50 ஏசியன் செலிபிரிட்டிஸ்” என்கின்ற தரவரிசியை ஆண்டுதோறும் வெளியீட்டு வருகிறது லண்டன் நகரை சேர்ந்த “ஈஸ்டர்ன் ஐ” என்ற நிறுவனம். இந்நிலையில் தற்பொழுது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இரண்டாம் இடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ள நிலையில் மூன்றாம் இடத்தில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார்.

மேலும் நான்காவது இடத்தில் பஞ்சாப் மொழியை சேர்ந்த ஒரு நடிகரான தில்ஜித் இடம் பெற்று இருக்கிறார் இவர் பஞ்சாபிய மொழிகளில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. அதே போல ஐந்தாவது இடத்தில் சார்லி என்ற நடிகர் பிடிக்க, ஆறாம் இடத்தை அனிமல் நடிகர் ரன்பீர் கபூர் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் பிரபல பாடகி ஷ்ரேயா கோசல் உள்ள நிலையில், லியோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் இந்த ஆசிய அளவிலான பட்டியிலில் எட்டாம் இடத்தை பிடித்திருக்கிறார் பிரபல நடிகர் தளபதி விஜய் அவர்கள். மேலும் இந்த பட்டியலில் 34-வது இடத்தில் பாலிவுட் உலகின் சாயின்ஷாவாக திகழ்ந்துவரும் அமிதாப்பச்சன் இருக்கும் நிலையில் டாப் 50 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் அவர்களுக்கு லியோ திரைப்படம் கொடுத்துள்ள மாபெரும் வரவேற்பு உலக அளவில் அவருடைய புகழை வேறு ஒரு அளவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து, தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் பாலிவுட் உலகின் பாட்ஷாவாக திகழ்ந்துவரும் ஷாருக்கான் அவர்கள்.

Related Posts

Leave a Comment