நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா..

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் நேற்று அனன்யா மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார்.

அதாவது, பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்கள் என்னென்ன விடயங்களை பயன்படுத்தி தங்களை கஷ்டப்படுத்தியுள்ளனர் என்பதனை கூறியுள்ளனர்.

இப்படியொரு நிலையில் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மாயா, நிக்ஷன் – ஐசு இருவரும் மாயாவிடம் கூறிய இரகசியத்தை கூற ஆரம்பித்துள்ளார்.

மாயா இப்படி நடந்து கொள்வது நிக்ஷனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அதற்காக மாயா என்னென்ன அறிவுரைகள் கூறினார் என்பதையும் கூறியுள்ளார்.

அத்துடன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.

ப்ரோமோ பார்த்த இணையவாசிகள், “ நிக்ஷனின் வேஷம் வெளுத்து விட்டது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Related Posts

Leave a Comment