கட்டிப்பிடி வைத்தியத்தை கையில் எடுத்து பக்கா பிளான் போட்ட பிரியங்கா! எந்த சதியிலும் சிக்காத ராஜூ

by Column Editor

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியை ராஜுவை கட்டிப்பிடிக்க வைக்க பிரியங்கா போட்ட பிளான் கடைசி வரை நடக்காமலே போனது.

பிரியங்காவின் கண்ணாடியாய் ராஜு செயல்பட்டு வரும் நிலையில் பாவனி ராஜுவின் சண்டையை தீர்த்து வைக்க பிரியங்கா பலமாக திட்டம் போட்டார். ஆனால், கடைசி வரை அது நிறைவேற வில்லை.

நிரூப் பிரியங்காவை விட்டு விலகினாலும் அவரது நட்புக்காக ரொம்பவே அடம் பிடித்து சண்டை எல்லாம் போட்டு தனது நட்பை நல்லாவே வெளிப்படுத்தி வருகிறார். பிக் பாஸ் தமிழ் 5 சீசன் தொடங்கியதில் இருந்து 45 நாட்கள் கடந்தும் பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.பாவனி பல முறை வான்ட்டட்டாக முயற்சித்தும் ராஜு அதனை தவிர்த்து வர சில காரணங்கள் இருப்பதாக கூறி வருகிறார். ஆனால், இன்னமும் என்ன காரணம் இருக்கு என்பதை கூறவில்லை.

கண்ணாடி டாஸ்க்கிற்கு பிறகு ராஜுவை வம்பிழுத்து சண்டையிட்ட பாவனியிடம் இருந்து எஸ்கேப் ஆக நினைத்த ராஜுவை போடா டேய் என பாவனி சொன்னது புரமோவில் காட்டிய நிலையில், மெயின் எபிசோடில் அதனை எடிட்டர் கட் செய்து விட்டார்.பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், கட்டிப்பிடி வைத்தியம் மூலமாக அதனை சரிசெய்யலாம் என தனது கண்ணாடியாக இருக்கும் ராஜுவை பயன்படுத்த பிரியங்கா பெரிதும் முயற்சித்தார்.அக்‌ஷராவும் பாவனியும் அருகருகே நிற்க அக்‌ஷராவை பிரியங்கா கட்டிப்பிடிக்க பாவனியை ராஜு கட்டிப்பிடிக்காமல் காற்றில் கட்டிப்பிடித்து கண்ணாடியாய் நடித்தார்.கட்டிப்பிடித்தது மட்டுமின்றி அக்‌ஷராவின் கன்னத்தையும் கிள்ளி ராஜுவை படாத பாடு படுத்தி விட்டார் பிரியங்கா.

அவர் செய்வது பாவனிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவரது முக பாவனையை வைத்தே கணிக்க முடிகிறது. ராஜுவை சிக்கலில் சிக்க வைக்க நினைத்த பிரியங்கா அப்படியே பாவனியை கட்டிப்பிடிக்க அப்போதும் ராஜு காற்றிலேயே கட்டிப்பிடித்தார்.இப்போ நீ அக்‌ஷராவை கட்டிப்பிடிக்கணும்னு சொல்ல அக்‌ஷரா மீது சாய்ந்து கொண்டார்.பாவனி மீது மட்டும் சாய மாட்ட, அக்‌ஷரான்னா ஓகேவா என பிரியங்கா சைகையிலேயே ராஜுவிடம் பேச செம காண்டாகி விட்டார் பாவனி.

ராஜுவை சிக்கலில் சிக்க வைக்க நினைத்த பிரியங்கா அப்படியே பாவனியை கட்டிப்பிடிக்க அப்போதும் ராஜு காற்றிலேயே கட்டிப்பிடித்தார். இப்போ நீ அக்‌ஷராவை கட்டிப்பிடிக்கணும்னு சொல்ல அக்‌ஷரா மீது சாய்ந்து கொண்டார்.பாவனி மீது மட்டும் சாய மாட்ட, அக்‌ஷரான்னா ஓகேவா என பிரியங்கா சைகையிலேயே ராஜுவிடம் பேச செம காண்டாகி விட்டார் பாவனி.பிரியங்கா ஏன் இப்படி செய்கிறார் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்தார். பிரியங்கா இருக்கும் இடத்தில் யாரும் இப்படி சண்டை போட்டுக் கொள்ள அனுமதிக்க மாட்டா என்றும் கூறினார்.பிரியங்காவின் இந்த முயற்சிக்கு ராஜு இடம் கொடுக்கவில்லை என்றாலும் பிரியங்காவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment