பிக் பாஸ் 5 வீட்டில் நடந்தது இதுதான்.. சிபி, அமீர், பாவ்னி பற்றி புட்டு புட்டு வைக்கும் ராஜூ!

by Column Editor

பிக் பாஸ் ராஜுவும் பிரியங்காவும் சேர்ந்து டான்ஸ் ஆடுகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பிக் பாஸ் கொண்ட்டாட்டம் நிகழ்ச்சிக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக பிக் பாஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் கொண்டாட்டம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் பல தரப்பு மக்களின் ஆதரவை பெற கூடிய நிகழ்ச்சிகள் நிறைய உள்ளன. அதில் சமீபத்தில் அதிக பேரால் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இதுவரை 4 பிக் பாஸ் சீசன்கள் முடிந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. சுமார் 20 போட்டியாளர்கள் இந்த ஐந்தாம் சீசனில் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் வெளியேறிய நிலையில் 5 பேர் இறுதி களத்திற்கு சென்றனர். கடைசியில் மக்களின் பேராதரவு பெற்ற போட்டியாளர் ராஜூ டைட்டில் வின்னர் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் பேட்டிகள் இணையத்தில் வெளியாகின. அதுமட்டுமில்லை தனியாக ரசிகர்கள் உடனும் லைவில் இவர்கள் பேசினர். அப்போது தான் ரசிகர்களுக்கு பிக் பாஸில் நடந்த பல உண்மைகள் தெரிய வந்தன. எடிட்டில் தூக்கப்பட்ட பல ரகசியங்களை போட்டியாளர்கள் வெளிப்படையாக கூறி ஆச்சரியத்தை தந்தனர். முக்கியமாக பாவ்னி அமீர் விவகாரத்தில் விஜய் டிவி எடிட்டிங்கில் விளையாடி இருந்ததும் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அதை அவர்களும் உறுதி செய்து இருந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 கொண்டாட்டம் நிகழ்ச்சியில் 20 பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆவலை தூண்டின. எப்போது விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். மீண்டும் சிபி, பிரியங்கா – ராஜூ காமெடி, தாமரை பேச்சுகளை பார்க்க ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்காக தற்போது பிக் பாஸ் சீசன் 5 கொண்டாட்டம் புரமோ வெளிவாகியுள்ளது.

ஞாயிறு மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ட்லிகாஸ்ட் செய்யப்படவுள்ளது. ராஜுவும் பிரியங்காவும் சேர்ந்து டான்ஸ் ஆடுகின்றனர். அந்த டான்ஸில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் செய்தது, அவர்களை பற்றிய ரசிகசியங்கள் எல்லாவற்ரையும் ராஜூ புட்டு புட்டு வைக்கிறார். இந்த டான்ஸை பார்த்து போட்டியாளர்களுக்கே சிரிப்பு தாங்க முடியவில்லை.

அதை தவிர ராஜூ வழக்கம் போல் ஒன் மேன் ஆர்மியாக எல்லோரையும் கலாய்ப்பது, வெட்டுக் கிளி பாலாவின் காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைக்கட்ட போகிறது. அதே போல் ராஜூவின்ஆர்மிகளும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து ராஜூவுக்கு சிறப்பு மரியாதை தரவிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment