நடிகை ஊர்வசியின் 700-வது படம்… 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குனருடன் கூட்டணி!

by Column Editor

28 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஊர்வசி மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.நடிகை ஊர்வசி 90களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் மலையாளத்திலும் பிரபல நடிகையாக இருந்து வந்தார். தற்போது ஊர்வசி குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஊர்வசி 28 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணி 1993 ஆம் ஆண்டு வெளியான ‘மிதுனம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினர்.

தற்போது உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ‘அப்பத்தா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஊர்வசியின் 700-வது படம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழில் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பை நேற்று இயக்குனர் பிரியதர்ஷன் வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment