பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறியா ?… நிரூப்பை விளாசும் பிரியங்கா !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறியா என்று நிரூப்பிடம் பிரியங்கா கேள்வி கேட்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஏற்கனவே அமீர் இறுதிப்போட்டிக்கு சென்று விட்ட நிலையில் அடுத்து ஒருவர் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களே, ஒருவரை இறுதிப்போட்டிக்கு இரண்டாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்ல ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை பற்றி கூறி வருகின்றனர். அந்த வகையில் வழக்கம் போல நிரூப், இறுதிப்போட்டிக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் பேசி வருகிறார்.

ஆனால், என்னடா இத்தனை விளையாட்ட தலைகீழா மாத்துர என்று நிரூப்பிடம் அமீர் கேள்வி எழுப்புனார். இதையடுத்து வெளியுலகில் இப்படி கிடையாது, ஆனால் இங்கே வந்து கேமுக்காக நடிக்கிறியா என்று நேரடியாக உன்னிடம் கேட்கிறேன் என்று பிரியங்கா, நிரூப் சொல்லும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment