முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்ய உதவும் கேரட் ஹேர் பேக் !!

by Column Editor

புரதத்தின் பற்றாக்குறையால் முடி உடைதல், முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல முடி பராமரிப்பு முறையை செய்வதன் மூலம் நமது புரத மேம்பட்டாடை அதிகரிக்க முடியும்.

தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க தலைமுடிக்கு புரதச்சத்து மிகுந்த உணவை நாம் உட்கொள்வதின் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் தலை முடியின் வேர்கால்களுக்கும் புரதச் சத்தை அளிக்க வேண்டும்.
முடியின் வளர்ச்சியை மேம்படுத்தி அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற செய்வதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது.
கேரட் 1, தேங்காய் பால் சிறிதளவு, பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன். முதலில் கேரட்டை தோல் சீவி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து பின் வடிகட்டி கேரட் சாறினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கேரட் ஜூஸுடன் சிறிதளவு தேங்காய் பால், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்,
கேரட் ஹேர் பேக்கினை நன்கு முடியின் வேர்கால்களில் படும்படி தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளளவும். பின்னர் ஷாம்புவினை பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி வலுப்பெற்று கூந்தல் அடர்த்தியாக வளரும்.

Related Posts

Leave a Comment