முகத்தில் வரும் மங்குவை சரி செய்ய வீட்டு வைத்தியம்..

by Lifestyle Editor

முகம், கழுத்து, தோள்கள், கைகளில் பழுப்பு அல்லது லேசான கருப்பு நிற படைகள் போன்று படர்வதையே மங்கு என அழைக்கிறோம். இது ஒருவரின் சருமத்தில் பழுப்பு நிற படைகள் போல் இருப்பதால், சூரிய வெப்பத்தில் ஏற்பட்ட தழும்புகள் என பலரும் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதுபோல் மங்குகள் வருவதற்கு பலவித உடல்நலக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மங்கு வருவதற்கான சில காரணங்களை தெரிந்துகொள்வோம்.

ஹார்மோன் :

மங்கு வருவதற்கு ஹார்மோன் மாற்றமும் முக்கிய காரணமாகும். பொதுவாக இது கர்ப்பிணிப் பெண்களையே அதிகம் பாதிக்கும். ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டெரோன் போன்ற ஹார்மோனில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் தோல் நிறமிக்கு காரணமாக இருக்கும் மெலனோசைட்ஸ் தூண்டப்பட்டு சருமத்தில் பழுப்பு நிறத்தில் திட்டுகள் தோன்றுகின்றன. கருத்தடை மாத்திரைகள் அல்லது ஹார்மோன் மாற்று சிகிச்சையை எடுத்துக்கொள்வதாலும் இதுபோன்ற வங்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

சூரிய ஒளி :

சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் மெலனோசைட்ஸை தூண்டி மெலனின் உற்பத்தியை அதிகபடுத்துகிறது. இதன் காரணமாக கோடை காலத்தில் வங்கு வருவது அதிகரிக்கும்.

வெப்பம் :

புற ஊதாக் கதிர்கள் தவிர்த்து வெயிலின் தாக்கமும் வங்கு தாக்குவதை அதிகப்படுத்தும். அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பது அல்லது அதிக வியர்வை வரும்படியான வேலைகளை செய்வதால் சருமத்தில் வங்கு வருவது அதிகரிக்கும்.

வெளிச்சம் :

எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சமும் வங்கு வருவதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதுகுறித்து இன்னும் விரிவாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.

மரபணு :

மரபணு ரீதியாகவும் வங்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவருடைய குடும்பத்தில் யாருக்காவது ம்ங்குப் பிரச்சனை இருந்தால், மற்ற நபர்களுக்கும் அதன் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.

மங்குவை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம் :

லெமன் ஜூஸ் : லெமன் ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட் கரும்புள்ளிகளை நீக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் லெமன் ஜூஸில் துணியை நனைத்து, அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். பின்னர் 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் அதை கழுவுங்கள். வங்குகள் நீங்கும் வரை இதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

கற்றாழை :

சருமத்திற்கு இதமளிக்கும் கற்றாழையில் வங்குவை நீக்கும் பண்புகள் உள்ளது. கற்றாழை பசையை மட்டும் தனியே பிரித்தெடுத்து அதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவிய பின்னர், 20-30 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும்.

சூரிய ஓலியிலிருந்து பாதுகாப்பு :

மங்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் சூரிய ஒளியிலிருந்து நமது சருமத்தை முதலில் பாதுகாக்க வேண்டும். SPF 30 அல்லது அதற்கும் மேலுள்ள சன் ஸ்க்ரீனை எப்போதும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சன் ஸ்க்ரீனை பூசிக் கொள்ளுங்கள். அதுவும் வெளியே சென்றாலோ அல்லது நீச்சலின் போதோ தவறாமல் இதை கடைப் பிடியுங்கள். சூரிய ஒளியிலிருந்தும் மோசமான புற ஊதாக் கதிர்களிலிருந்தும் பாதுகாக்க நல்ல அகலமான தொப்பி, சன் க்ளாஸ் மற்றும் உடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment