ராகி அடை ரெசிபி.!!!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

1 கப் ராகி மாவு,
1/2 கப் முருங்கை கீரை,
1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி,
1 பெரிய வெங்காயம்,
2 பச்சை மிளகாய்,
1 கொத்து கருவேப்பிலை,
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும் அல்லது பச்சையாகவும் நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்க்கலாம். பின் ராகி மாவுடன் வெங்காயம், இஞ்சி, முருங்கை கீரை, பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீர் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கும் அளவுக்கு பிசைந்து கொள்ளவும். பின் ஒரு வாழை இலை எடுத்து அதில் எண்ணெய் தடவி சிறிதளவு மாவு வைத்த பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி முருங்கை கீரை அடை தயார். விருப்பப்பட்டால் இதற்கு சட்னி வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment