173
சிலர் எந்த முயற்சியும் இல்லாமல் சமைத்தால் கூட உணவு அருமையாக இருக்கும். ஆனால், சில பெண்களோ ரொம்பவே முயற்சி செய்து சமைத்தாலும் கூட உணவு சுவையாக இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் இந்த பிரச்சினையை சந்திக்கிறீர்களா.?
தக்காளி சாதம், லெமன் தான், குஸ்கா, பிரியாணி போன்வற்றைக் குக்கரில் செய்யும் போது, மூடியைத் திறந்தவுடனே எலுமிச்சைச் சாறை அதன் மேல் சிறிதளவு பிழிந்து கிளறிவிட்டால், சாதம் கொழயாம்ல் உதிரியாக இருக்கும்.
வாழைப்பூவை நீங்கள் பிரித்தெடுக்கும் போது அது விரைவில் கருமையாக மாறிவிடும். எனவே, இதைத் தவிர்க்க உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் பிரித்தவுடனே போடுங்கள். பூ கறுக்காது.
உங்கள் வீட்டில் பக்கோடா செய்யும் போது மொறு மொறுப்பாக வர வேர்ககடலையை பொடியாக்கி அதை கடலைமாவில் கலக்கவும்.