சீஸ் ஆம்லெட் சாண்ட்விச்… ரெசிபி இதோ…

by Lifestyle Editor

அவசரத்திற்கு காலை உணவாகவோ அல்லது மாலையில் போர் அடித்தால் செய்து சாப்பிடவோ இந்த சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பிரெட் – 2

முட்டை – 1

வெங்காயம் – 2 tbsp

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

மிளகுப் பொடி – கொஞ்சம் சுவைக்காக

உப்பு – தே.அ

சீஸ் – 2 tbsp

வெண்ணெய் – 1 tsp

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் சீஸ் துருவி அதையும் கலந்துகொள்ளுங்கள்.

இதை தற்போது முட்டை ஆம்லெட்டாக தவாவில் ஊற்றி பெப்பர் தூவி வாட்டி எடுக்கவும்.

அடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் வாட்டி எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.

தற்போது மீண்டும் தவாவில் வைத்து பிரட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.

Related Posts

Leave a Comment