முட்டை தொக்கு..

by Editor News

தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை – 4

நடுத்தர பெரிய வெங்காயம் – 3

நடுத்தர தக்காளி – 3

சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

சிறிய இஞ்சி துண்டு – 1

பூண்டு – 2 பல்

கிராம்பு – 6

கருப்பு மிளகு – 10

எண்ணெய் – 2 டீஸ்பூன்

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் முட்டைகளை வேகவைத்து அதன் ஓடுகளை நீக்கி எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு வேகவைத்த முட்டைகளை 8 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அடுத்து இஞ்சி, பூண்டு, கருப்பு மிளகு, கிராம்பு ஆகியவற்றை இடித்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் ஏழு நிமிடங்களுக்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு அதில் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை மற்றொரு 2 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் தொடர்ந்து வதக்கவும்.

பின்னர் அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து கலந்து எண்ணெய் பிரியும் வரை 2 நிமிடங்கள் சமைக்கவும்.

அடுத்து அதனுடன் வேகவைத்த முட்டை துண்டுகளை போட்டு மெதுவாக கலந்து 2 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து இறக்கினால் சுவையான முட்டை தொக்கு ரெடி.

Related Posts

Leave a Comment