நெல்லிக்காய் ஜாம்..

by Editor News

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 5

வெல்லம் – 1 கப்

இஞ்சி – ஒரு துண்டு (துருவியது)

பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் நெல்லிக்காயை நன்றாக அலசி எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் நெல்லிக்காய்களை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவை நன்றாக வெந்தவுடன் எடுத்து அதை நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் நன்றாக ஆறயபின் அதை துருவி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் துருவிய நெல்லிக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளுங்கள்.

இவை ஜாம் பதத்திற்கு நன்றாக இருகி வந்தவுடன் அதில் சுவைக்கேற்ப உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய்ப் பொடி மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே அனைத்தையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் தோசை, பிரட், சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி…

Related Posts

Leave a Comment