இன்று ரோஜா தினம்.. எந்த கலர் ரோஸ் கொடுத்தால் என்ன அர்த்தம்…

by Lifestyle Editor

சிவப்பு நிற ரோஜா (red rose) :

சிவப்பு நிறம் என்பது மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நிறமாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் சிவப்பு நிற ரோஜா காதலை வெளிப்படுத்தும் குறியீடாக இருக்கிறது.

​வெள்ளை நிற ரோஜா (white rose) :

வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. புதிய தொடக்கத்திற்கான அடையாளமாகவும் வெண்மை நிறம் இருக்கிறது. அதனால் புதியதாக, புனிதமான காதலையும் அன்பையும் வெளிப்படுத்த உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வெள்ளை நிற ரோஜாவைப் பரிசாகக் கொடுக்கலாம்.

​பிங்க் நிற ரோஜா (Pink Rose) :

கருணை, மென்மை, இரக்கம் ஆகியவற்றின் அடையாளமாக இந்த பிங்க் நிறம் பார்க்கப்படுகிறது.

உங்களுடைய இளகிய மனதையும் அதனுள் இருக்கும் குழந்தைத்தனமான அன்பையும் வெளிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு பிங்க் நிற ரோஜாவைப் பரிசளிக்கலாம்

ஆரஞ்சு நிற ரோஜா (Orange Color Rose) :

ஆரஞ்சு நிறம் ஒருவித உற்சாகத்தைத் தரக்கூடிய நிறம். புதிதாக வாழ்க்கையின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமாக ஆரஞ்சு நிறம் பார்க்கப்படுகிறது. அதனால் உங்களுடைய வாழ்க்கையில் புதிய வசந்த கால் வரசேவற்க விரும்ினால் நீங்கள் ஆரஞ்சு நிற ஆராஜாவைத் தேர்வு செய்து பரிசளிக்கலாம்.

மஞ்சள் நிற ரோஜா (Yellow Rose)

மஞ்சள் மகிழ்ச்சி மற்றும் நட்புறவைக் குறிக்கும் நிறமாகப் பார்க்கப்படுகிறது.

அதனால் உங்களுடைய நண்பர்களுக்கும் புதிதாக நட்பில் இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கும் மஞசள் நிற ரோஜாக்களைப் பரிசாகக் கொடுக்கலாம்.

​நீலநிற ரோஜா (Blue Rose)

நீல நிற ரோஜாக்கள் பெரும்பாலும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. அதன் குறியீடும் அப்படித்தான்.

அரிதான விஷயங்களுக்காகவும் புதிதாக ஈர்ப்பும் மிகுந்த விஷயத்தை விரும்புவதாகவும் குறிப்பது தான் நீலநிற ரோஜா. அதனால் நீங்கள் அரிதானவராக கருதும் நபருக்கு நீல நிற ரோஜாவைப் பரிசாகக் கொடுக்கலாம்.

​பவள நிற ரோஜா ( Ruby Color Rose)

சிவப்பும் இல்லாமல் ஆரஞ்சும் இல்லாமல் ஒருவித அடர்ந்த நிறத்தில் இருக்கும் ரோஜா எல்லோருக்கும் பிடிக்கும். அது இளமை மற்றும் உணர்வின் துடிப்பை வெளிப்படு்த்தும் வண்ணமாகப் பார்க்கப்படுகிறது. உங்களுடைய உணர்வின் துடிப்பையும் ஆழமான காதலுணர்வையும் வெளிப்படுத்த இந்த பவள நிற ரோஜாக்களைப் பரிசாகக் கொடுக்கலாம்.

Related Posts

Leave a Comment