தர்பூசணியை பார்த்து வாங்குவது எப்படி …

by Lifestyle Editor

கோடை காலத்தில் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்றாக தர்பூசணி உள்ளது. கோடை வெயிலில் இருந்து உடலை நீரேற்றமாக வைக்கவும், உடல் சூட்டை தணிக்க என ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுள்ளது தர்பூசணி. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. கோடைக்காலத்தில் இது அதிகளவில் விற்பனையாவதால் இதிலும் கூட கடப்படம் செய்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?. கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.

சில சமயங்களில் நாம் தர்பூசணி வாங்க கடைக்கு செல்லும் போது, அடர் சிவப்பு நிறத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இப்படிப்பட்ட தர்பூசணிகளைப் பார்த்தவுடன் ஆஹா.. இது நல்லா இனிக்கும் என நினைத்து நாம் யோசிக்காமல் வாங்கிவிடுவோம். ஆனால், இந்த நிறம் ஒரு வியாபார உத்தி என உங்களுக்கு தெரியுமா?. இரசாயனங்களை பயன்படுத்தி பழங்களில் சிவப்பு நிறத்தை கொண்டு வருகின்றனர். அவை, ஆரோக்கியமானவை அல்ல. நீங்கள் கடையில் வாங்கும் தர்பூசணி இயற்கையாக பழுத்ததா இல்லை இரசாயனம் கொண்டு வலுக்க வைத்ததா என்பதை எப்படி கண்டு பிடிக்கலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.

சிவப்பான தர்பூசணி ஏன் ஆபத்தானது? :

சிட்டிகிரீனின் கூற்றுப்படி, விற்பனையாளர்கள் பழுக்காத தர்பூசணியை விரைவாக பழுக்க வைக்க ஆக்ஸிடாஸின் (Oxytocin) ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆக்ஸிடாஸின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால், வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, பேதி போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். இன்னும் சிலர் தர்பூசணியில் விரைவாக பழுக்க கால்சியம் கார்பைடு-யை (Calcium Carbide) பயன்படுத்துகின்றனர். இது ஈரத்துடன் சேரும்போது எத்திலீனை வெளியிடுகிறது. இதனால், காய் வேகமாக பழுக்கிறது. இதை சாப்பிடுவதால் தலைவலி அல்லது புற்றுநோய் கூட ஏற்படலாம்.

செயற்கையாக பழுத்த அல்லது ரசாயனம் கலந்த தர்பூசணியை எப்படி அடையாளம் காண்பது?

சுவை மூலம் அடையாளம் காணலாம் :

தர்பூசணியை வேகமாக பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் போது, ​​அது இயல்பை விட பல மடங்கு வேகமாக செல்களை பிரிக்க ஆரம்பித்து. இதனால், இயற்கையான இனிப்பு சுவை பாதிக்கப்படும். எனவே, தர்பூசணியின் சுவை இனிப்பு இல்லாமல் சலசலவென இருக்கும். பார்ப்பதற்கு தர்பூசணி சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அதில் இனிப்பு சுவை இருக்காது. அப்படி இருந்தால் அது இயற்கையாக பழுத்த பலம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கையில் இருந்து வாங்கி வந்த தர்பூசணியில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, வெட்டி வைத்த தர்பூசணி துண்டை தண்ணீரில் மூழ்க வைக்கவும். பாத்திரத்தில் இருந்த தண்ணீரின் நிறம் மாற ஆரம்பித்தால், அது ரசாயனம் கலந்த பழம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தர்பூசணியை 2 முதல் 3 நாட்கள் ஒரு மேசையில் அப்படியே வைக்கவும். அதில் ரசாயனம் செலுத்தப்பட்டிருந்தால், அது வேகமாக அழுக ஆரம்பித்து, பழங்களில் இருந்து துர்நாற்றம் வீசும். பழத்தின் சாறு தானாகவே வெளியேறும். இது ரசாயனம் கலந்த பழம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தர்பூசணி எப்படி பார்த்து வாங்கணும்?

தர்பூசணியை வாங்குவதற்கு முன்பு தர்பூசணியின் வெளியில் இருக்கும் புள்ளிகளை ஆராய வேண்டும். நீங்கள் சிறந்த தர்பூசணியை தேர்ந்தெடுக்க க்ரீமி – மஞ்சள் அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமுடைய புள்ளிகளை உடைய தர்பூசணியை பார்த்து தேர்ந்தெடுங்கள். தர்பூசணியில் உள்ள மஞ்சள் பாகம் அதன் இனிப்பு சுவையை பறைசாற்றுகிறது. அது தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்காக பூவைத் தொட்ட காலத்தை குறிக்கிறது. எனவே அதிக மகரந்த சேர்க்கை செய்யப்பட்ட தர்பூசணி மிகவும் இனிப்பாக இருக்கும்.

Related Posts

Leave a Comment