அல்லு அர்ஜுனின் புஷ்பா 3 வெளியாக உள்ள மாஸ் அறிவிப்பு..

by Lifestyle Editor

2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அல்லு அர்ஜுனினி கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படமாகவும் புஷ்பா மாறியது. புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்றார். மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு கிடைத்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புஷ்பா தி ரூல் என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிப்பு ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புஷ்பா 3 குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவுகிறது. அதாவது இதுவரை இந்த படம் 2 பாகம் தான் என்று நினைத்த ரசிகர்களுக்கு தற்போது சர்பிரைஸாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.அதாவது புஷ்பா தி ரைஸ், புஷ்பா தி ரூல் படங்களை தொடர்ந்து புஷ்பா தி ரோர் என்று இந்த படத்திற்கு பெயரிடப்படப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புஷ்பா படத்தின் கதையை ஒரு வெப் சீரிஸை உருவாக்கும் அளவுக்கு நீளமான ஸ்கிரிப்டை எழுதியதாகவும், அதில் தேவையான மாற்றங்களை செய்ததாகவும் இயக்குனர் சுகுமார் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் புஷ்பா 2 மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து புஷ்பா 3-வது பாகத்தை உருவாக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அல்லு அர்ஜுனும், தயாரிப்பு நிறுவனமும் இதற்கு ஒப்புக்கொண்டதால் புஷ்பா 3 குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது.

மேலும் புஷ்பா 3 படத்தில் ஏற்கனவே நடித்துள்ள நடிகர்கள் தவிர புதிய நடிகர்களை சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இனி வில்லனாக நடிக்க போவதில்லை என்று விஜய் சேதுபதி கூறியிருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே அதில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்பது தெரியவரும்.

Related Posts

Leave a Comment