கர்ப்பிணி மென்மையான இசையை கேட்பதால் கிடைக்கும் நன்மைகள்

by Lifestyle Editor

சமீப கால ஆராய்ச்சிகளில் கர்ப்பிணிகள் இசையை கேட்பதை கர்ப்பகாலத்தில் ஓய்வெடுப்பதற்கான சிறந்த வழியாக பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பிணிகள் இசை மகிழ்ச்சியா? மன அழுத்தமா?

இசை கேட்பதால் மன அழுத்தம் குறைகிறது. உடலில் கேடகோலமைன் மற்றும் மன அழுத்த ஹார்மோன் அளவை குறைப்பதன் மூலம் மன அழுத்த அறிகுறிகள் பதட்டம் போன்றவற்றை குறைக்க இசை அறியப்படுகிறது. இது பொது ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த செய்கிறது.
கர்ப்பிணிக்கு வலியை கட்டுப்படுத்த இந்த இசை கேட்பது உதவும். கர்ப்பிணிகள் இசை கேட்பது உண்மையில் தூண்டப்பட்ட வலி நிவாரணி என்று அழைக்கபடுகிறது.

கர்ப்பிணிக்கு இசை கேட்பது அறிகுறியை தீவிரபடுத்துமா?

கர்ப்பிணி இசை கேட்பது எண்டோர்பின் சுரப்பு அதிகரிக்க செய்யும். இது வலியை குறைக்கும் மூளையின் ஆரோக்கியம் காக்கும்.

மனதின் கவனச்சிதறல் மற்றும் வலியின் போது எந்த நேரத்திலும் வலி நிவாரணம் அளிக்க இவை உதவும்.

இசை கேட்பது குறைந்த பதட்டம் மற்றும் அதிகரித்த தளர்வு காரணமாக சிறந்த சகிப்புத்தன்மையை அளிக்கிறது.

கர்ப்பிணி இசை கேட்பதால் Descending Pain Modulatory System (DPMS) நேரடி அல்லது மறைமுக தடுப்பு விளைவால் மூளை தண்டுவடத்தில் அமைந்துள்ள வலி உணர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பாக கருதப்படுகிறது.

கர்ப்பிணி இசையை கேட்பது மருந்துக்கு மாற்றாக இருக்குமா?

கர்ப்பிணிக்கு மருந்து அல்லாத சிகிச்சையாக இசை இருக்கும். கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை மற்றும் மனநல நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பது எப்போதும் சவாலானது. ஏனெனில் மருந்துகள் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த இசை கேட்பது மருந்துக்கு மாற்றாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் பல்வேறு உடல் மற்றும் மனநல நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க இசை சிகிச்சையின் பல நன்மைகள் சமீபத்திய ஆண்டுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பெரினாட்டல் காலத்துக்கான தரப்படுத்தப்பட்ட வலுவான சிகிச்சை நெறிமுறைகளை உறுதி செய்ய கூடுதல் ஆராய்ச்சி தேவை. இது இசையின் வகை, சிகிச்சையின் நேரம் மற்றும் கால அளவை குறிக்க கூடியது.

கர்ப்பிணி இசை கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் :

கர்ப்பிணி பெண்கள் இசை கேட்பதால் தூக்கத்தின் தரம் மேம்படுத்தப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணிக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் மகப்பேறுக்கு முந்தைய கவலையை மேம்படுத்துவதில் இசை உதவும்.

ப்ரீக்ளாம்ப்சியா சிகிச்சை கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் ஆகும். இந்த ப்ரீக்ளாம்ப்சியா உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த அழுத்தம் குறைய இசை உதவும். ப்ரீக்ளாம்ப்சியா உள்ள பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம்.

பிரசவத்தின் போது மன அழுத்தம் மற்றும் பதட்டம் இருக்கும் இதை குறைப்பதில் இசை தலையீடுகளின் நன்மைகள் பயனுள்ளதாக இருக்கும் என்கிறது ஆராய்ச்சி.

கர்ப்பிணி பெண்ணுக்கு மகப்பேறுக்கு முற்பட்ட மனச்சோர்வு மன அழுத்தம் பதட்டம் ஆகியவற்றுடன் கர்ப்பகால மனச்சோர்வை குறைக்கவும் இவை உதவும்.

பிரசவம் அறுவை சிகிச்சையாக இருந்தால் அதற்கு முந்தைய மன அழுத்தத்தை குறைக்க உதவும். கர்ப்பிணி பிரசவக்காலத்தின் அருகில் இசை கேட்பது பிரசவத்துக்கு முந்தைய மனச்சோர்வு அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கர்ப்பிணி என்ன மாதிரியான இசை கேட்கலாம்
வேகமான இசையை கேட்கும் போது இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதே நேரம் மென்மையான இதமான இசை இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்கும். கர்ப்பிணிகள் ஓய்வாக இருக்கும் போது, இரவு படுக்கைக்கு செல்லும் போது மெல்லிய இசை ஒலிக்கவிடுவது தாய் சேய் இருவரது ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும்.

Related Posts

Leave a Comment