பற்களில் கூச்சம் , வாய் துர்நாற்றம்.. ஆயுர்வேத டிப்ஸ்..

by Lifestyle Editor

பல ஆரோக்கிய பிரச்சனைகளை போலவே அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக சமீப காலத்தில் உருவெடுத்து இருக்கிறது பல் சார்ந்த பிரச்சனைகள். 80 வயதை கடந்த சில முதியவர்களின் பற்கள் உடையாமல், விழாமல் வேறு ஏதும் பிரச்சனைகள் இன்றி இன்னும் அப்படியே வலுவாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

அதே நேரம் சிறுகுழந்தைகள், இளவயதினர் என பலர் மத்தியிலும் பல்வலி, பற்களில் கூச்சம், வாய் துர்நாற்றம் போன்ற வாய்வழி பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள், சாப்பிட்ட பிறகு பற்கள் மீது அக்கறை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பற்கள் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. இந்த சூழலில் பற்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

ஒரு சிலர் ஐஸ் வாட்டர் குடிக்கும் போது அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடும் போது தங்கள் பற்களில் கூச்ச உணர்வு அல்லது உங்கள் பற்களில் கடும் வலியை உணர்வார்கள். தவிர வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவது. பற்களின் ஈறுகளில் இருந்து ரத்தம் அல்லது சீழ் வெளியேறுவது உள்ளிட்ட சிக்கல்களயும் எதிர்கொள்வார்கள். இதில் நீங்களும் ஒருவர் என்றால் எளிய வீட்டு வைத்தியம் ஒன்றை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சுபால் மாவட்டத்தின் சிம்ராஹி நகர் பஞ்சாயத்து வார்டு-8ல் அமைந்துள்ள ஆயுர்யோகா ஆராய்ச்சி அறக்கட்டளையின் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ரித்தேஷ் மிஸ்ரா பேசுகையில் உப்பு, மஞ்சள் மற்றும் தூய்மையான கடுகு எண்ணெயை (pure mustard oil) பயன்படுத்துவது பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நமக்கு நிவாரணம் அளிக்கும் என்கிறார்.மக்களிடையே பல்வலி பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பற்களில் ஏற்படும் கேவிட்டி என்பது வாயில் பாக்டீரியாக்கள் குவிந்ததன் காரணமாக ஏற்படும் plaque-ன் விளைவாகும். சில நேரங்களில் சீழ் அல்லது ரத்தம் வெளியேற கூடும். இது pyorrhea என்றழைக்கப்படுகிறது.

உப்பு, கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் கலவையுடன் மசாஜ்:

பல சந்தர்ப்பங்களில் அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் அல்லது சூடான நீரை குடிப்பதால் பற்களில் கூச்சம் அல்லது சென்சேஷன் ஏற்படுகிறது. இது சென்சிட்டிவிட்டி என்றழைக்கப்படுகிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்க பல் துலக்கிய பின் உப்பு, கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த மிக்சிங்கை எடுத்து கையின் நடுவிரலால் பற்கள் மற்றும் ஈறுகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

காலை மற்றும் இரவு… பல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட நினைப்போர் மேற்கண்ட கலவையை பின்வருமாறு தயார் செய்யலாம். 2 சிட்டிகை உப்பு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 2 முதல் 6 துளிகள் தூய்மையான கடுகு எண்ணெயை எடுத்து ஒன்றாக கலக்கி எடுத்து கொள்ள மருத்துவர் ரித்தேஷ் மிஸ்ரா கூறுகிறார். காலை மற்றும் இரவு என 2 வேளையிலும் பற்களை நன்கு விலக்கிய பிறகு கைகளின் நடு விரல்களால் பற்கள் மற்றும் ஈறுகளை இந்த கலவையை கொண்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பல் கூச்சம், பையோரியா, பல் வலி, வாய் துர்நாற்றம் போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து ஒருவர் நிவாரணம் பெறலாம். இதனை தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறுகிறார் ரித்தேஷ் மிஸ்ரா.

Related Posts

Leave a Comment