ஏலக்காயின் மருத்துவ பயன்கள்!

by Lifestyle Editor

ஏலக்காய் ஒரு முக்கியமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இரவில் ஏலக்காய் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் எடை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
ஏலக்காயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.
ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சுவாசத்தை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளில் இருந்து ஏலக்காய் நிவாரணம் அளிக்கிறது.
ஏலக்காயை உட்கொள்வதால் தூக்கமின்மை பிரச்சனையை குறைப்பது மட்டுமின்றி தூங்கும் போது குறட்டை விடுவதும் சரியாகிறது.
ஏலக்காய் சிறுநீரகத்தில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஏலக்காய் உதவுகிறது.
ஏலக்காயை சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சனைகள் குறைந்து, முடி வலுவடையும்.

Related Posts

Leave a Comment