உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம் இதுதான்.. நயனின் ஃபிட்னஸ் சீக்ரெட்

by Lifestyle Editor

நடிகை நயன்தாரா

முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வரும் நயன்தாரா தற்போது ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட், இறைவன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள செய்து வரும் விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 70 கிலோ எடையில் இருந்த நயன்தாரா இப்படி தனது உடல் எடையை குறைத்தார் என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க..

நயனின் ஃபிட்னஸ் சீக்ரெட்

ஜிம் ஒர்கவுட் மற்றும் யோகா இரண்டும் நயன்தாராவின் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியது. குறிப்பாக யோகா நயன்தாராவின் ஃபிட்னஸுக்கு அதிகம் கைகொடுக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் நயன்தாரா யோகா செய்வாராம்.

நயன்தாராவின் டயட் பிளானில் கண்டிப்பாக இளநீர் இருக்குமாம். தினமும் ஒர்கவுட் முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவாராம் நயன்.

நயன்தாராவின் காலை உணவில் கண்டிப்பாக ஸ்மூத்தி இருக்குமாம். இது உடல் எடையை குறைக்கவும், எனர்ஜியை கூட்டவும் உதவுகிறது.

நயனின் மதிய உணவில் இறைச்சி, முட்டை, காய்கறி என அனைத்தும் சமமாக இருக்குமாம். கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவாராம் நயன்தாரா.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கும் பழக்கத்தை நயன்தாரா வைத்துள்ளார். சரியான தூக்கம் உடல் எடையை குறைக்க மிகவும் அவசியமாம். இவை தான் நயன்தாராவின் ஃபிட்னஸ் சீக்ரெட்.

Related Posts

Leave a Comment