கற்பூரவள்ளியின் நன்மைகள்

by Lifestyle Editor

கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும். மேலும் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

இருமல், சளி போன்ற நோய்களுக்கு கற்பூரவல்லி முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இது அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளடக்கியது. கற்பூரவல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கற்பூரவள்ளி இலையை எண்ணெய்யில் பொரித்து அந்த எண்ணெய்யை தொண்டையில் தடவி வந்தால் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

கொதிக்கும் நீரில் கற்பூரவல்லி இலைச்சாற்றை சேர்த்து ஆவி பிடித்து வந்தால் இருமல் மற்றும் சளி குணமாகும். பல் சிதைவு, ஈறுகள் பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவல்லி பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற அதிகாலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுக்கலாம். இந்த சாற்றை குடித்த அரை மணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கொடுக்க கூடாது.

ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் பெரியவர்கள் கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். கற்கண்டு சேர்த்தும் இலையை மென்று சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment