மின்சாரத்துறையில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பு!

by Lifestyle Editor

இலங்கையின் மின்சாரத்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எரிசக்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி மற்றும் நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மின்சார சபையின் மறுசீரமைப்பு பணியகத்தை பராமரிப்பதற்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிபுணர்களுக்கும் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment