இயற்கை அழகிற்கு புதினாச் சாறு போதும்! உங்கள் முகம் பளிச்சினு மின்னும்..

by Lifestyle Editor

டிப்ஸ் 1:

முகம் பளபளப்பாக இருக்க இரவு தூங்கும் முன்பு சிறிதளவு பாலுடன், புதினாச் சாறு கலந்து முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவலாம். இதனால், முகம் பளப் பளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கும் பளபளப்பு தோன்றும்.

டிப்ஸ் 2

முகம் பளப்பளப்பாக இருக்க தயிர் – அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன், ரோஸ் வாட்டா – 1 டீஸ்புன் மூன்றையும் ஒன்றாக கலந்து ம் மதிய வேளையில் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின் முகத்தை கழுவ முகம் பளப்பளப்பாக இருக்கும்.

டிப்ஸ் 3:

வெள்ளரிக் காயையும், கேரட்டையும்மிக்ஸியில் போட்டு அரைத்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும். இதனால், முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும். முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

டிப்ஸ் 4:

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பத்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

டிப்ஸ் 5:

பச்சரிசி மாவு 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், அதில் ஒரு டீஸ்புன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் போட்டு விடுங்கள். இதனால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளிகள் நீங்கும்.

Related Posts

Leave a Comment