குளிர்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி ..

by Lifestyle Editor

ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப நம் அழகு பராமரிப்பு விஷயங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. பெரும்பாலும் நமது சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து தான் பல பிரச்சினைகள் அமைகின்றன. குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய பல தொந்தரவுகளில் ஒன்று நம்முடைய கூந்தல் எண்ணெய் மற்றும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதாக மாறுவதுதான்.

நம் கூந்தல் பிசுபிசுப்பாக பார்ப்பதற்கு கொஞ்சம் ஒரு மாதிரியாக தெரியும் பட்சத்தில் நாம் ஏதோ குளிக்காமல் அல்லது தலையை பராமரிக்காமல் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இந்த குளுமையான காலத்தில் உங்கள் கூந்தல் அழகை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் தலை பிசுபிசுப்பாக மாறுவது ஏன்?

பொதுவாக நம் தலை வறட்சி உடையதாக இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் இதற்கு நேர் மாறாக நம் தலைப்பகுதியில் எண்ணெய் சுரப்பு இருக்கும். தினசரி நாம் தலைக்கு குளிக்காவிட்டால், அந்த எண்ணெய் பிசுபிசுப்பு கொண்டதாக மாறும். மற்றும் நம் முடியில் சிக்கலை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், மழை காலத்தில் நாம் அணியக் கூடிய ஸ்வெட்டர் அல்லது கேப் போன்றவை காரணமாக நம் தலையில் கூடுதல் அழுக்கு சேர்ந்து விடுகிறது.

குளிர் காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்ப்பது எப்படி?

குளிர் காலத்தில் கூந்தலை இறுக்கி பின்னக் கூடாது. கொஞ்சம் லூஸாக கட்டிக் கொள்வது நல்ல தோற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளின் உட்புறப் பகுதிகளில் அழுக்கு சேர்ந்திருக்கும். பழைய ப்ரெஷ் கொண்டு அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

வாரம் இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு, அழுக்கு, தூசு போன்றவை நீங்கும். வீட்டில் பயன்படுத்தும் தலையணைகள் சுத்தமானதாக இருக்க வேண்டும். அதில் அழுக்கு இருந்தால் உங்கள் தலையில் சேரும்.

தினசரி கூந்தலை வார வேண்டும். இப்படி செய்வதால் எண்ணெயானது கூந்தலின் முழு நீளத்திற்கும் சென்று சேரும். வாரம் ஒரு முறையாவது ஆழமாக சுத்தம் செய்யும் வகையிலான ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி தலையில் கை வைக்கக் கூடாது.

கற்றாழை :

இயற்கையாகவே கிடைக்கக் கூடிய ஷாம்பூ என்றே இதனை குறிப்பிடலாம். வளவளப்பு கொண்ட இந்த கற்றாழையில் முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. கற்றாலை, வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் 2:1:1 என்ற பங்கு அடிப்படையில் கலந்து தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.

க்ரீன் டீ அல்லது பிளாக் டீ :

உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் எப்போது புத்துணர்ச்சி தரக் கூடிய க்ரீன் டீ அல்லது பிளாக் டீ என்பது, நம் கூந்தல் அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறிது டீயை கொதிக்க வைத்து, அது முழுமையாக ஆறிய பின்னர், தலைக்கு தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து வழக்கம் போல தலைக்கு குளிக்கலாம்.

Related Posts

Leave a Comment