இடுப்பு சதையை குறைக்க இந்த 5 விஷயம் ஃபாலோ பண்ணுங்க!

by Lifestyle Editor

தொப்பை போன்று இடுப்பு கொழுப்பும் பலருக்கும் கவலையான ஒன்றாகவே உள்ளது. இடுப்பு கொழுப்பினால் பிட்டப்பகுதியும் பருமனாக இருக்கும். இடுப்பு பகுதியில் கொழுப்பு சேமிக்க தொடங்கும் போது அது ஆரோக்கியமற்ற உணவு தொடங்கி வாழ்க்கை முறை, மரபணு அமைப்பு அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு என பல காரணங்களை கொண்டிருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் இடுப்பு கலோரிகளை எரிப்பதிலும் ஒட்டுமொத்த எடையை குறைப்பதிலும் கவனம் செலுத்தும் போது சற்று மெனக்கெட வேண்டியிருக்கும்.

கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சி :

கார்டியோ உடற்பயிற்சிகள் கலோரிகளை எரிப்பதற்கும் இடுப்பு பகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த கொழுப்பு இழப்பை ஊக்குவிப்பதற்கும் முக்கியமானதாகும்.

உங்கள் தினசரி அன்றாட நடவடிக்கையில் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவற்றை சேர்த்துகொள்வது பலன் அளிக்கும். மிதமான தீவிர கார்டியோ பயிற்சியில் வாரத்தில் மொத்தமாக 150 நிமிடங்கள் செய்வது பலன் அளிக்க செய்யும்.

உணவு முறையில் கவனம் செலுத்துங்கள் :

ஆரோக்கியமான உணவு பழக்கம் எடை இழப்புக்கு உதவும். கொழுப்பு இழப்பில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள், காய்கறிகள் ஒல்லியான புரதங்கள். மற்றும் முழு தானியங்கள் போன்ற முழு உணவுகளையும் அடங்கிய உணவுகளை எடுத்துகொள்வது பலனளிக்கும். இந்நிலையில் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை நிர்வகிக்க முடியும். அதே போன்று சிற்றுண்டிகளாக கொட்டைகள் சேர்க்கலாம். அவகேடோ, ஆலிவ் எண்னெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு மூலங்கள் சேர்க்கலாம். இந்த கொழுப்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். உணவில் ஒவ்வொரு பகுதியின் அளவை கண்காணிப்பது அதிகமான உணவை எடுத்துகொள்வதை தவிர்க்க செய்யும். ஒவ்வொரு நாளும் எரிப்பதை விட குறைந்த கலோரிகள் எடுப்பதை உறுதி செய்யுங்கள்.

போதுமான தூக்கம் அவசியம் :

நல்ல தரமான தூக்கம் கிடைக்கும் ஒவ்வொரு இரவும் சரியான அளவு தூங்குவது எடை இழப்பை ஊக்குவிக்கும். தினசரி 7 முதல் 9 மணி நேரம் வரை தரமான தூக்கம் இலக்காகி கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இரவு நீண்ட நேரம் கண்விழிக்க வேண்டாம். பகலில் அதிக நேரம் தூங்கவும் வேண்டாம்.

நீரேற்றம் :

போதுமான தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு அவசியம். இது எடை இழப்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தண்ணீர் குடிப்பது போதுமான அளவு பசியை கட்டுப்படுத்த செய்கிறது. நீர்ச்சத்து செரிமானத்தை ஆதரிக்கிறது. அதிகப்படியான கலோரி உட்கொள்வதையும் தடுக்க செய்கிறது. நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நீரேற்றம் அளிக்கும்.

மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது எடை இழப்பை மேம்படுத்தும் :

அனைவருக்கும் மன அழுத்தம் உண்டு. ஆனால் அதிகப்படியான மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யும் என்கிறது ஆராய்ச்சி. மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது எடை இழப்பு திட்டத்தின் முக்கிய பகுதி.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியும் , மன அழுத்தத்தை குறைக்க உதவும். மன அழுத்தம் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் எடை அதிகரிக்க செய்யும்.

இடுப்பு கொழுப்பு குறைய காத்திருப்பு அவசியம் :

இடுப்பு பகுதியில் கொழுப்பு இருந்தால் உணவு, உடற்பயிற்சி செய்தால் உடனே குறைந்துவிடும் என்று நினைக்க கூடாது. சில வாரங்களுக்கு பிறகு மிகச்சிறிய அளவு வித்தியாசம் இருக்கலாம். உடனே நடந்துவிடும் என்று நினைக்கும் அளவுக்கு எடை இழப்பு மேஜிக் கிடையாது. சரியான திசையில் சரியான உணவு முறையில் சரியான வாழ்க்கை முறையில் இருப்பது மட்டுமே சரியான முறையில் பக்கவிளைவில்லாமல் எடை இழப்பை உண்டு செய்யும்.

Related Posts

Leave a Comment