பதவி விலகினார் சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

by Lifestyle Editor

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இன்று (செவ்வாய்கிழமை) இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல, தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு
எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினமே வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment