சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்க

by Lifestyle Editor

ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

சிலர் முகத்தில் பரு வந்தாலே கைகளை வைத்து கிள்ளுவது வழக்கம். இதனால் முகத்தில் அசிங்கமான தழும்பை ஏற்படுத்தி விடுகின்றது.
முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

Related Posts

Leave a Comment