புதிய வகை ஒமிக்ரான் தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்ய தடை விதித்தது வங்காளதேசம்

by Lifestyle Editor
0 comment

வங்காளதேசம்:

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வகை தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் எதிரொலியால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவின் புதிய மாறுபாட்டு தொற்று பரவலின் எதிரொலியால் தென் ஆப்பிரிகாவில் இருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு வங்காள தேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்காச தேசத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜாகித் மாலே கூறியதாவது:-

ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா தொற்று மிகவும்ஆக்ரோஷமானது. அதனால், தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வங்காள தேசத்திற்கு வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மேலும், அனைத்து துறைமுகங்களிலும் தீவிர சோதனை நடைமுறைகளையும் அரசு வலுப்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

Leave a Comment