மிளகாய் சாப்பிட வைத்த நிரூப்.. எல்லைமீறி போகிறாரா?

by Column Editor

பிக் பாஸ் 5ல் இன்று நிரூப் பாவனி மற்றும் சுருதி ஆகியோரை பச்சை மிளகாய் சாப்பிட வைத்திருகிறார்.

ஹைலைட்ஸ்:
பெட்ரூம் 7 நிமிடம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்
மீறுபவர்களை பச்சை மிளகாய் சாப்பிட வைத்த நிரூப்.

இது ஐந்தாவது வாரம், கடந்த வாரம் நெருப்பு வாரம் என சொல்லி இசைவாணி கிச்சன் ஏரியா கண்ட்ரோல் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் சிறப்பாக செய்யவில்லை என பிக் பாஸே விமர்சித்தார்.

அதனை தொடர்ந்து இந்த வாரம் நிலம் வாரம் என சொல்லி அந்த காயின் வைத்து இருக்கும் நிரூப் நந்தகுமாருக்கு பெட்ரூம் ஏரியாவை கண்ட்ரோல் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரத்தை போல இல்லாமல் இந்த வாரம் பல்வேறு விதிமுறைகளும் போடப்பட்டு இருக்கிறது.

நிரூப் அனுமதி இல்லாமல் யாரும் பெட்ரூம் உள்ளே வரவே கூடாது. அதை மீறி வந்தால் தண்டனை வழங்க வேண்டும் . மேலும் தினமும் ஐந்து போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டுக்கு வெளியில் தூங்க சொல்லி உத்தரவிட வேண்டும். மேலும் காலையில் எழுந்திருக்கும் முன்பு அவருக்கு காபி மற்றும் காலை உணவு வழங்கப்பட வேண்டும். அதை யார் செய்து கொடுப்பார்கள் என்பதையும் நிரூப் முடிவு செய்து சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தன்க்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை வைத்து நிரூப் மற்ற போட்டியாளர்களை வெச்சி செஞ்சு வருகிறார். அதிலும் இன்று பெட்ரூம் உள்ளே மற்ற போட்டியாளர்கள் 7 நிமிடம் மட்டுமே வந்து செல்ல வேண்டுமென கட்டுப்பாடு விதித்து இருக்கிறார். அதனால் பெண் போட்டியாளர்கள் பலரும் வேகவேகமாக மேக்கப் செய்து கொண்டிருப்பது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

7 நிமிடத்தை தாண்டினால் தண்டனை வழங்கப்படும் என அறிவித்து மிளகாய் சாப்பிட வைத்திருக்கிறார் நிரூப். பாவனி மற்றும் சூருதி ஆகியோர் அதனால் மிளகாய் சாப்பிட்டு இருக்கின்றனர்.

ஆந்திரா மீல்ஸ் சாப்பிடும் பாவனிக்கு இந்த மிளகாய் எல்லாம் சாதாரணம் என சொல்லி கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் கடந்த வாரம் இசைவாணி சர்வாதிகாரி என சொன்ன இமான் அண்ணாச்சி இந்த வாரம் என்ன செய்ய போகிறார் எனவும் கேட்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment