பிக்பாஸை தொகுத்து வழங்கும் ராஜமாதா… அறிமுகப்படுத்திய கமல்..

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதாக கமல் அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 55-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் அவர் கொராவானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதில் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று கமல் அறிவித்துள்ளார்.

இது இதுகுறித்த இன்றைய தினத்தில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசும் கமல், மக்களை நோக்கி மருத்துவமனையிலிருந்து நான் பேசுகிறேன் என்று கமல் கூறுகிறார். அப்போது போட்டியாளர்கள், கமல் விரைவில் நலம்பெற வாழ்த்துக்களை என தெரிவித்தனர்.

இதையடுத்து பேசும் கமல், தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்க எனக்கு ஒரு தோழி உதவி செய்ய வந்திருக்கிறார். அவரை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கமல் கூறுகிறார். அப்போது பிரம்மாண்டமாக ரம்யா கிருஷ்ணன் வரும் காட்சி ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. அதனால் இன்றைய நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment