பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு யுகேந்திரன் போட்ட பதிவு ,..

by Lifestyle Editor

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் மாதத்தை முடித்துவிட்டது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறினார்கள். 5 பேர் வெளியேற இப்போது புதிய 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்துள்ளனர்.

கடைசியாக யுகேந்திரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது மக்கள் ஏற்கவில்லை. இவர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பதை தாண்டி நடிகராக மக்களால் அறியப்பட்ட யுகேந்திரன் பிக்பாஸ் மூலம் எப்படிபட்ட பாடகர் என்பதையும் தெரிந்துகொண்டார்கள்.

அதோடு இவரது மனைவி யுகேந்திரன் 2 வாரங்கள் மட்டுமே பிக்பாஸில் இருப்பார் அதற்கு மேல் தாக்கு பிடிக்க மாட்டார் என பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யுகேந்திரன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், முடிந்த வரை முயற்சி செய்வோம் முடிவுகளை ஏற்றுக் கொள்வோம் என பதிவு செய்ய ரசிகர்கள் உங்களது எவிக்ஷன் ஏற்க முடியாத ஒரு விஷயம் Unfair எவிக்ஷன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment