வனிதாவால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு… கதறி அழும் ஜூலி !

by Column Editor

வனிதா மற்றும் ஜூலி இடையே சண்டை ஏற்பட்டதால் பிக்பாஸ் வீடே பற்றி எரிகிறது.

இன்றைய தினத்தின் வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா வீடு தற்போது களவரமாகியுள்ளதை காட்டுகிறது. டாஸ்க் விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகளை ப்ரோமோவில் காட்சிகளாக காட்டியிருந்தனர். இதில் பாலா, அபிராமி, ஜூலி உள்ளிட்டோரிடம் வனிதா சண்டை போடுகிறார். அந்த வனிதா மற்றும் ஜூலி இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட சண்டை குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாய். நாமினேட் செய்துவிட்டு எவிக்ஷன் வரை கொண்டு வந்துவிட்டு எந்த பீலிங்கும் இல்லை என்கிறாய். சரி எல்லாம் போகட்டும். ஒருவரை எவிக்ஷன் செய்கிறேன் என்று செய்கிறாய். காரணம் கேட்டால் அவர் நல்ல விளையாடறாங்க. இந்த பாயிண்ட் சரியாக இருக்கிறதா. அவங்க கிட்டயே எல்லா பொருட்களை வாங்கி போட்டுகுவாய் என வனிதா கேட்கிறார். அதுக்குதான் நன்றி சொல்லிவிட்டேனே என ஜூலி சொல்லி, அந்த நன்றியை குப்பையில் போடு என்கிறார் வனிதா.

நீ செய்த காரியத்திற்கு உன்னை பிக்பாஸ் வீட்டில் விட்டதே தப்பு என்று ஜூலியை பார்த்து வனிதா சொல்ல, அதற்கு ஜூலியோ, உங்களை விட்டிருக்காங்களே என கோவமாக கூறுகிறார். அடுத்த காட்சியில் ஹவுஸ்மேட்டுகளிடம் பேசும் ஜூலி, எல்லா பொருட்களையும் வாங்கி விட்டு அவங்களுக்கே எதிராக இருக்கேன் என்கிறார். என்ன இதெல்லாம் என்று ஜூலி அழுதுக்கொண்டே சொல்லும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment