இந்த சீசனின் வெற்றியாளர் இவரா ?.. கசிந்தது புதிய தகவல் !

by Column Editor
0 comment

பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி இன்னும் இரு நாட்களில் முடிவடையவுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி பல்வேறு சுவாரஸ்சியங்கள் நிறைந்து காணப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 5 நபர்கள் மட்டுமே இறுதிப்போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளனர்.

இவர்களில் யார் பிக்பாஸ் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. வழக்கம்போல் இந்த 5 போட்டியாளர்களுக்கான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம்போல் ராஜூ மற்றும் பிரியங்கா முதல் இரண்டு இடத்தில் பிடித்துள்ளனர். மற்ற மூவரும் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனில் ராஜூவே வின்னராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ராஜூவுக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தற்போது கிராண்ட் பினாலேவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment