தரலோக்கலாக இறங்கி சண்டைப் போட்டுக்கொண்ட தாமரை – இசைவாணி

by Column Editor

தாமரைச்செல்வி மற்றும் இசைவாணி ஆகிய இருவரும் தரலோக்கலாக இறங்கி சண்டைப்போட்டுக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினத்தில் அபினய் சிபியின் கண்ணாடியாகவும், இமான் ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜூ பிரியங்காவின் கண்ணாடியாகவுமாகவும் பிரதிப்பலித்து விளையாடினர்.

மூன்றாவது நாளாக இன்று இந்த டாஸ்க்கில் தொடர்ந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் முதல் ஜோடியாக இசைவாணியும், தாமரைச்செல்வியும் பங்கேற்றுள்ளனர். தாமரைச்செல்வி, இசைவாணியின் கண்ணாடியாக பிரதிப்பலித்து பேசி வருகிறார். அதில், எனக்கு எதுவுமே புரியவில்லை என்று நீங்க சொல்லுவீங்க. ஆனால் உங்களுக்கு புத்தி சொல்கிற அளவுக்கு எனக்கு புத்தி இருக்கு என்றார் தாமரை. அவங்க கொடுத்த கீரை மற்றும் காய்கறி ஆகியவற்றை சாப்பிட ஆள் இல்லை. அதை உங்ககிட்ட சொல்ல வந்தேன். ஆனால் நீங்க கையெடுத்து கும்பிட்டீங்க. அதனால்தான் நான் கோவப்பட்டேன் என்று சொல்லும்போது, இசைவாணி தலையை குனிந்துக்கொள்கிறார்.‌

அதனால் கோவமாகும் தாமரை முகத்தை பார்க்க மாட்டியா என்று கேட்கிறார். அதன்பிறகு ‘தாமரை கண்ணங்கள்’ என்ற பாட்டை பாடுவதோடு டாஸ்க் நிறைவுபெறுகிறது. இதையடுத்து அடுத்த காட்சியில் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் ‘ஹேய் வாயை மூடு. நான் அந்த புள்ளயை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தாமரை சொல்ல, அதற்கு பெரிய இதுவாட்டும் உட்கார்ந்து இருங்க’ என்று இசைவாணி பேசினார். இப்படி இரு போட்டியாளர்கள் தரலோக்கலா பேசிக்கொள்ளும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

Related Posts

Leave a Comment