பிரபுதேவா – ஹரிகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தேள்’

by Column Editor

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது.

‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்த ஹரிகுமார் தற்போது கதை – திரைக்கதை எழுதி புதிய படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு தேள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படம் குறித்த சுவாரசியமான தகவல் என்னவென்றால் பிரபுதேவா – ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள்.

தற்போது தேள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment