சூர்யா மற்றும் அருண் விஜய் இடையே மோதல்… ஒரே நாளில் வெளியாகும் படங்கள்!

by Column Editor

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் அருண் விஜயின் யானை திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வருகிறது எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. அதே தேதியில்தான், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தையும் வெளியிட ஹரி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ஹரி உடன் முதன் முறையாக யானை படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் அருண் விஜய். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி, வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்கும் துணிந்தவன் மற்றும் யானை ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டுமே ஒரே ஜேர்னர் படங்களாக இருப்பதால் இரு படங்களும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment