239
இந்திய திரையுலகில் உள்ள பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக உள்ளவர் தான் ராஜாமௌலி.
பாகுபலி படத்தை தொடர்ந்து இவரின் திரைப்படங்களுக்கு உலகமுழுவதும் பெரிய மார்க்கெட் உண்டாகியுள்ளது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள RRR திரைப்படம் உலகமுழுவதும் 10,000 மேலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையே அடுத்ததாக ராஜமௌலி யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது அப்படத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், அதில் அவர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.