‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

by Column Editor

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து ஆடும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டாவது பாடலான நாட்டுக் குத்து பாடல் வெளியாகியுள்ளது

ராஜமௌலி பிரம்மாண்ட உருவாக்கி வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோக்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வில்லனாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆலியா பட் மற்றும் ஒலிவியா மோரீஸ் என இருகதாநாயகிகள் நடித்துள்ளனர். டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே எஸ்.எஸ்.கீரவாணி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘நாட்டுக்குத்து’ என தொடங்கும் அந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடனம் ஆடியுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. லிரிக்கல் பாடலாக வெளியாகியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுத, ராகுல் மற்றும் யாசின் நிசார் இணைந்து பாடியுள்ளனர். இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment