203
ராஜா ராணி என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன் ஒரு ஹிட் படம் வந்தது. ஆர்யா-நயன்தாரா நடித்த அப்படம் பல நாட்களுக்கு மேல் ஓட படக்குழு வெற்றிவிழா எல்லாம் கொண்டாடினார்கள்.
அப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ, முதல் படமே செம ஹிட்டடிக்க அவருக்கு அடுத்த படமே தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தெறி, மெர்சல், பிகில் என 3 படங்கள் விஜய்யை வைத்து இயக்கிவிட்டார், அடுத்து யாருடைய படம் இயக்குவார் என்று பார்த்தால் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படம் தொடங்கியது முதல் சில பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் அட்லீக்கு 7வது திருமண நாள் வர செம கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், பிரியாவும் அழகான புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
அவர்களின் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.