‘டான்’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது

by Column Editor

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் அவரின் அடுத்த படங்களுக்கும் அதிக பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை லைகாவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தற்போது டான் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். போஸ்டரில் சிவகார்த்திகேயன் உடன் சிவாங்கி, மிர்ச்சி விஜய், பாலசரவணன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

Related Posts

Leave a Comment