பாசத்துக்குரியவனே… உன் மறைவு பேரதிர்ச்சிடா.! பிரபல நடன இயக்குனர் மறைவால் சோகத்தில் மூழ்கிய திரைத்துறையினர்.!

by News Editor

தமிழ் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடன இயக்குநர் கூல் ஜெயந்த். இவர் சில காலமாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த். பிரபுதேவா, ராஜூ சுந்தரம் நடனக்குழுவில் பணியாற்றி வந்த இவர், ’காதல் தேசம்’ படம் மூலம் நடன இயக்குநர் ஆனார். காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற முஸ்தபா முஸ்தபா.., கல்லூரிச் சாலை பாடல்கள் அப்போது ரசிகர்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்

இதனையடுத்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய கூல் ஜெயந்த், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள கூல் ஜெயந்த், புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. இயக்குநர் பாரதிராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், பாசத்துக்குரியவனே, உன் மறைவு பேரதிர்ச்சிடா, மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்

Related Posts

Leave a Comment