பாம்பு, எலிகளுடன் பழங்குடி மக்கள் நடிகர் சூர்யாவிற்கு நன்றி!

by Column Editor

ஜெய் பீம் திரைப்படத்தை படைத்தமைக்காக நடிகர் சூர்யாவிற்கு பழங்குடி இன மக்கள் பாம்புகள், எலிகளுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் திரைப்படம் உருவாகியுள்ளது. சூர்யா முன்னணிக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தனர்.

படம் அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் படத்தில் ஒரு காட்சியில் உதவி காவல் ஆய்வாளர் குருமூர்த்தி இல்லத்தில் அக்னி சட்டி இடம் பெற்ற காலண்டர் பின்னணியில் தொங்க விடப்பட்டிருக்கும். எனவே அது குறிப்பிட்ட சாதியினரை குறிப்பிடுவதாக படக்குழுவினருக்கு கடும் கண்டனங்களும் எழுந்தன. அந்த பிரச்சினை தற்போது வரை நீடித்து வருகிறது. சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்து பழங்குடி மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்காக பழங்குடி இன பாம்புகள், எலிகளுடன் மதுரையில் நன்றி தெரிவித்தனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் சூர்யா அவர்களுக்கு தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பாக நன்றி என்ற பதாகைகளை ஏந்தியுள்ளனர்.

Related Posts

Leave a Comment