நான் குண்டாக இருந்தாலும் தவறு, ஒல்லியாக இருந்தாலும் தவறு.. மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா

by Lifestyle Editor
0 comment

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் வாரிசு படம் தமிழில் வெளிவந்தது.

திரையரங்கங்களில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது. நடிகை ராஷ்மிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.

மனமுடைந்த ராஷ்மிகா

இதில் ‘ சில நேரங்களில் என உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன். நான் ஒர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் கிரிஞ் என்று கூறுகிறார்கள். பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் அதை தெளிவாக கூறிவிடுங்கள். என்ன தவறான முறையில் நினைக்காதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது ‘ என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment