பிக்பாஸ் சீசன் 6 வின்னர் யார் … பரிசுதொகை எவ்வளவு தெரியுமா ?

by Editor News

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்று தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவுபெற உள்ளது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக மைனா நந்தினி இணைந்தார். வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகளுடன் விறுப்பாக சென்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து மட்டும் தானாவே வெளியேறிவிட்டார். மற்றபடி எப்போதும் போல் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்பட்டனர். 15 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதியில் 6 போட்டியாளர்கள் மட்டும் இருந்தனர். அதில் பணப்பை டாஸ்க்கில் 3 லட்சத்துடன் கதிரவன் வெளியேறினார். அதன்பிறகு அமுதவாணன் 11.75 பணத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்றார். இதுதவிர மைனா நந்தினி மட்டும் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார்.

தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் மட்டும் உள்ள இதில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு டைட்டில் வின்னர் பட்டமும், 50 லட்சம் ரொக்கமும், இரண்டாவது போட்டியாளருக்கு 25 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. அதனால் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment