பிக் பாஸ் அல்டிமேட்டில் குக் வித் கோமாளி நட்சத்திரம்? எதிர்பார்க்காத ஒருவர்

by Column Editor

விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆன புகழ் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அஸ்வின் ஹீரோவாக நடித்த என்னசொல்லப்போகிறார் படத்திலும் அவர் நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனம் தான் கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் அடுத்து அஜித்தின் வலிமை ரிலீசுக்காக அவர் காத்திருக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக அதுவும் தள்ளிப்போய்விட்டது. வேலும் தற்போது புகழ் கைவசம் விஜய் சேதுபதி படம் மட்டுமே இருக்கிறது.

தற்போது வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் புகழ் தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக கலந்துகொள்ள போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

முந்தைய சீசன் போட்டியாளர்கள் மட்டுமே வர இருப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது புகழ் இணைந்திருப்பதாக வந்திருக்கும் தங்கவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.\

Related Posts

Leave a Comment